கட்டிட செலவு அதிகரித்து வரும் நிலையில் கட்டுமான பொருட்களின் விலை 6 சதவீதம் உயர்வு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இந்தாண்டு கட்டுமான பொருட்கள் மற்றும் பல்வேறு நிலையிலான ஊழியர்களின் ஊதியம் நிர்ணயிப்பது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கடந்தாண்டை காட்டிலும் 5 சதவீதம்  முதல் 6 சதவீதம் வரை உயர்த்தி புதிய விலைப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மெட்ரிக் டன் ஸ்டீல் 45 ஆயிரம், ஒரு மெட்ரிக் டன் சிமென்ட் 5,800 ஆகவும், 1000 செங்கல் விலை 7,509, 40 எம்எம் ஜல்லி ஒரு கியூபிக் மீட்டர் 672 ஆகவும், கிராவல் மண் ஒரு யூனிட் 210, எம்சாண்ட் ஒரு யூனிட் 1,250, பி-சாண்ட் ஒரு யூனிட் 1255, மணல் ஒரு யூனிட் 447 உட்பட பல்வேறு வகையான கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, 6 ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க் வாடகை 2139, ஜேசிபி ஒரு நாள் வாடகை 5,600 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  பிஇ படித்த தொழில்நுட்ப உதவியாளர் ஒருநாள் ஊதியம் 937, சிவில் இன்ஜினியரிங்  படித்த தொழில்நுட்ப உதவியாளர் 844, கார்பென்டர் 752, துப்புரவாளர் 592, பிட்டர் 576, டிரைவர் (இலகு ரக வாகனம்) 592, டிரைவர் (கனரக வாகனம்) 633, மேஸ்திரி 571, டிகிரி படித்த மேஸ்திரி 633, பணி ஆய்வாளர் 484, மெக்கானிக் 592, கடைநிலை ஊழியர் 502, பழங்கால கட்டிட பணி மேற்கொள்ளும் கொத்தனார் 1085, சித்தாள் 949, கொத்தனார் 769, சித்தாள் 718 ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டுமான பொருளின் விலை உயர்வு ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories: