கொடைக்கானலில் வாகனப்போக்குவரத்தை கட்டுப்படுத்த வண்ண மை பூசும் நடவடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த வண்ண மை பூசப்பட்டது.கொடைக்கானல் நகர் பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி நாள்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. போலீசார் சோதனை செய்தால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வதாகக் கூறி சென்று வருகின்றனர். இதை முறைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வண்ண மை பூசும் பணியை நேற்று தொடங்கினர். முதல் தடவை பிடிபடும் வாகனத்தில் மஞ்சள் மை பூசப்பட்டு எச்சரித்து அனுப்பப்படும். இரண்டாம் முறை இந்த வாகனங்கள் தணிக்கையில் ஈடுபடும் போலீசாரிடம் சிக்கினால் நீலக்கலர் பூசப்படும். அடுத்த முறை இந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

வண்ண மை பூசும் நடவடிக்கையின்போது கொடைக்கானல் ஆர்டிஓ சிவகுமார், தாசில்தார் வில்சன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் ஆர்டிஓ சிவகுமார் கூறுகையில், ‘வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வண்ண மை பூசும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாகன போக்குவரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: