தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானியலையே நிலவும்.

தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாக்கக்கூடும் என்பதால் அடுத்துவரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 03.00 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: