மதுரை சித்திரை திருவிழாவை ஆகம விதிப்படி நடத்த வழக்கு: அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: சித்திரைத் திருவிழாவை ஆகம விதிப்படி நடத்தக் கோரிய வழக்கை ஐகோர்ட் கிளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என மறுத்துள்ளது. மதுரை, தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண்போத்திராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், பூப்பல்லக்கு என பல நிகழ்ச்சிகள் நடக்கும். இதற்காக மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில்  தென் மாவட்டத்தினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பர். மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு பல நூற்றாண்டுகளாக சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

எங்களது மண்டகப்படியிலும் அழகர் எழுந்தருள்வார். இவரை மதுரை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிலையில், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு நடக்கவில்லை. இதனால், இந்தாண்டுக்கான திருவிழாவை நடத்த அறநிலையத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, மதுரை சித்திரை திருவிழாவை ஆகம விதிகளுக்கு உட்பட்டு கூட்டம் சேர்ந்திடாத வகையில் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தற்ேபாது கொரோனா பரவல் காரணமாக ஐகோர்ட் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, இந்த பொது நல வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளக் கோரி மனுதாரர் வக்கீல் ஜின்னா, ஐகோர்ட் கிளை பதிவாளருக்கு (நீதி) இமெயில் செய்திருந்தார். இந்த மனு குறித்து பதிவுத்துறை சார்பில் உரிய நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ெபாதுநல வழக்கை அவசரமாக விசாரிக்க ேவண்டியதில்லை என பதிவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: