கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 135 கோடி நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 135 கோடி நிதியுதவி வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளுக்கு என முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கடந்த 6ம் தேதி வரை, மொத்தம் 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

 கடந்த ஏழு  நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: