பசியால் வாடிய மக்களுக்கு 60 கிலோ மீட்டர் தாண்டி சென்று உணவு வழங்கல்: கம்பம் இளைஞர்கள் மனிதநேயம்

கம்பம்: கொரோனா ஊரடங்கு உத்தரவால்  பசியால் வாடும் குடும்பங்களுக்கு 60 கிலோமீட்டர் தாண்டி சென்று உணவு வழங்கி வருகின்றனர் கம்பம் இளைஞர்கள்.கொரோனா ஊரடங்கு உத்தரவால் தேனி மாவட்டம், வருசநாடு, கடமலை  அருகே உள்ள கரட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் நரிக்குறவர்கள் பலர் உணவின்றி தவிப்பதாக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இதனையடுத்து  கம்பம் பசுமை சேவை குழு  ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம், துணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஜெய்லானி, பொறுப்பாளர்கள் ரியாஸ்,  கரீம் மற்றும் முபாரக் ஆகியோர் கொண்ட இளைஞர் குழு சுமார் 50 குடும்பத்திற்கு தேவையான உணவை தயார் செய்து  நகராட்சி அனுமதி பெற்று சரக்கு வாகனத்தில்  கம்பத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கரட்டுபட்டிக்கு கொண்டு சென்றனர். அங்கு  பசியால் தவித்து வந்த நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார். இளைஞர்களின் மனிதநேயமிக்க செயலை மக்கள் பாராட்டினர்.

Related Stories: