கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்: தாம்பரம் நகராட்சி ஏற்பாடு

தாம்பரம்: தாம்பரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் நகராட்சி மூலம், ரூ.500க்கு 19 வகை மளிகை பொருட்கள் வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வசித்த பகுதி நோய் தொற்று பரவல் ஏற்படாமல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு அந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடைகள் திறக்க நேற்று முதல் தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார். இதனையொட்டி அந்த பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தாம்பரம் நகராட்சி சார்பில்19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500க்கு வீடு வீடாக நகராட்சி ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யும் பணியை தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் மொய்தீன் ஆய்வாளர்கள் சிவகுமார், சாமுவேல் உடனிருந்தனர்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா கூறுகையில், ‘‘தாம்பரம் நகராட்சியில் கொரனோ பாதிப்பை தடுக்க தாம்பரம் சேலையூரில் பள்ளி மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இதிலும் கூட்டம்  கூடுவதை தவிர்க்க காய்கறிகள் 20  வாகனங்களில் நகராட்சி சார்பில் 100 ரூபாய் தொகுப்பாக தயார் செய்யப்பட்டு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறோம். 19 வகையான மளிகை பொருட்கள் முதல் கட்டமாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.500க்கு வழங்கி வருகிறோம். காய்கறிகள் வீடுகள் தேடி வழங்குவது போல அனைத்து வீடுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த இந்த பணிகளை செய்கிறோம். பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நோய்,’’என்றார்.

Related Stories: