மருந்து கண்டுபிடிக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என்பதால் கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன் : மருந்து கண்டுபிடிக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆகலாம் என்பதால் 2021 வரை கொரோனா இருக்கும் என்றும் கொரோனா வைரஸை தோற்கடிக்க மருந்துதான் சிறந்த வழி என்றும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 95,769 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,04,950 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,56,673 ஆகவும் அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் 16,697 பேரும், ஸ்பெயினில் 15,447 பேரும்,இத்தாலியில் 18,279 பேரும், பிரான்சில் 12,210 பேரும், சீனாவில் 3,336 பேரும், ஈரானில் 4,110 பேரும், ஐரோப்பியாவில் 7,978 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது கொரோனா வைரஸ் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டுக்கு மேல் கூட ஆகலாம் என்றும் அதனால் 2021ம் ஆண்டு வரை கொரோனாவின் தாக்கம் இருக்கும் என்றும் கூறினார்.மருத்து கண்டுபிடிப்பதுதான் மிக முக்கியம். அது கிடைக்கும் வரை நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்பாது. என அவர் குறிப்பிட்டார். வைரசை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் ஆனால், சரியான மருந்து கண்டுபிடிக்கும் வரை அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கும். எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: