கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் வீரியம்: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு; 166 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்   உலகளவில பலி எண்ணிக்கை 88,403 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 1,513,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 329,731 பேர் குணமடைந்தனர். மேலும் 48,078 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  கொரோனாவால் இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி    செய்யப்பட்டுள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 738 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 28 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

பிகாரில் 38 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 18 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.

சட்டிஸ்கரில் 10 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 179 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 147 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.

டெல்லியில் 669 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 345 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 83 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 381 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 4 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 14 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 42 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 5 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 158 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 181 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.

பாஞ்சாபில் 101 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 427 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 35 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 103 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 348 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 229 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 361 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 27 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 18 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 11 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

Related Stories: