கொரோனா பாதிப்பில் 2-வது இடம்; தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்?... மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்துக்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு 2 வாரத்திற்குள்  பதிலளிக்க நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ள நிலையில் குறைவான நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.510 கோடி போதுமானதாக இருக்காது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: