கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரி சேகரிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றியுள்ள வீடுகளில் ஆய்வு செய்யும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் வரை 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளைச் சுற்றியுள்ள 2500 வீடுகளை ஆய்வு செய்யும் பணியை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது. இதன்படி 67 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 23 மருத்துவர்கள் தலைமையிலான குழு வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் அறிகுறி உள்ளவர்கள் இருந்தால் அவரது மாதிரியை சேரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி நேற்று 5 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: