இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 4,421-ஆக உயர்வு; பாதிப்பில் இருந்து 326 பேர் குணமடைந்தனர்....மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த பெட்டியில் கூறியதாவது; இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதித்த 8 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே 2,500 பெட்டிகளில் 40,000 தனிமை படுக்கைகளை தயார் செய்துள்ளது. அவர்கள் தினமும் 375 தனிமை படுக்கைகளை உருவாக்கி வருகின்றனர், இது நாடு முழுவதும் 133 இடங்களில் நடந்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலை & பெரிய திருப்திகரமாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் நிலை மற்றும் பூட்டுதல் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் விரிவான ஆய்வு செய்தார், தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்தல் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஒரு கொரோனா தொற்று பாதித்த நோயாளி, மருத்துவ அறிவுறுத்தல்படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால், 30 நாட்களில்  அவர் மூலமாக 406 பேருக்கு கரோனா பரவும் அபாயம் இருப்பதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1,07,006 சோதனைகள் இன்றுவரை செய்யப்பட்டுள்ளன.

நேற்று வரை 11795 சோதனைகள் நடத்தப்பட்டன, இதில் 2530 தனியார் துறையில் உள்ளன. தற்போது, 136 அரசு ஆய்வகங்கள் செயல்படுகின்றன, 59 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளின் தரத்தில் எந்தவிதமான சமரசத்துக்கு இடமில்லை. மேலும் தரம் குறைவான பாதுகாப்பு உடைகளை மத்திய அரசு வாங்காது. இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதியோடு நிறைவடையவிருக்கும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊகங்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: