ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்: அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு புழல் ஏரி தண்ணீர் சூரப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய நிலையங்களில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுகிறது. இங்கு உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆவடி டேங்க் பேக்டரி, ஆவடி மாநகராட்சி மற்றும் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகியவற்றிற்கு அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, சி.டி.எச் சாலை வழியாக குழாய்கள் பூமிக்கடியில் செல்கிறது. இந்நிலையில், அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் அடிக்கடி ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக ஓடி வருவது வழக்கம். நேற்று காலை சுமார் 8 மணியளவில் திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலை, பஸ் நிறுத்தம் அருகில், ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

 இதனையடுத்து, குழாயிலிருந்து தண்ணீர்  நாகம்மை நகர் பகுதி தெருக்களில் ஆறாக ஓடியது. இதனால், பாதசாரிகள் சாலையில் நடமாட முடியாமல்  கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால், அவர்கள் 2 மணி நேரமாகியும் குடிநீரை நிறுத்த எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக தெருக்களில் ஓடியது.  தகவலறிந்து தாமதமாக வந்த  உயர்  அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: