மருத்துவ, அபாயகரமான கழிவு அகற்றும் நிறுவனங்களுக்கான அனுமதி காலநீட்டிப்பு

சென்னை: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய மற்றும் முக்கியமான செயல்பாடுகள் எவ்விதமான இடையூறுமின்றி இயங்கி வருகிறது. இதற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டியது என்பதே காரணமாகும்.  குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை வசதி சுகாதாரமான முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அபாயகரமான மற்றும் பிற கழிவுகள், மருத்துவக்கழிவுகள், திடக்கழிவுகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் அனுமதி மார்ச் 31ம் தேதியுடன் முடிந்தது.  எனினும், தற்போதுள்ள சூழலில் இந்நிறுவனங்களுக்கான அனுமதியினை வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.  

Related Stories: