கொரோனா தடுப்பு பணிக்கு பவர்கிரிட் ரூ.200 கோடி நிதி

சென்னை: நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பவர் கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பி.எம்-கேர்ஸ்) நிதிக்கு ₹200 கோடி நிதி உதவி வழங்குகிறது.  இந்த தொகை 2 தவணைகளில் வழங்கப்படுகிறது. அதன்படி, முதல் தவணையாக ₹130 கோடியை தற்போது வழங்கியுள்ளது. அடுத்த நிதியாண்டில் (2020-21) மீதமுள்ள ₹70 கோடியை வழங்க உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, நாட்டிற்கு உதவும் வகையில், தங்களது ஊழியர்கள் மற்றும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.  தவிர, பவர் கிரிட் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக குடிசை பகுதிகளில் உணவு வழங்கி உள்ளது.

நாட்டின் அனைத்து பவர் கிரிட் துணை நிலையங்களிலும் கட்டுமான தளங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முகமூடிகள், சோப்புகள், சானிடைசர்கள், உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு நேரத்தில் பவர் கிரிட் தடையின்றி 24x7 நேரம் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்து வருகிறது, எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: