போதை படுத்தும்பாடு மதுபான கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் ‘குடிமகன்ஸ்’

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இது, மதுபான அடிமைகளுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. மது குடிக்காமல் இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் பலர் தற்கொலை செய்துள்ளனர். இதனால், கேரளாவில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மது வழங்க, முதல்வர் பினராய் விஜயன் முடிவு செய்துள்ளார். அதே நேரம், மது கிடைக்காத மற்ற மாநிலங்களில், கடைகளை உடைத்து திருடி குடிக்கும் அளவுக்கு மது வெறியர்கள் சென்றுள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் மதுகடைகள் இதுபோல் உடைக்கப்பட்டு, மது பாட்டில்கள் பெட்டிப் பெட்டியாக திருடப்பட்டு வருகிறது.

இதேபோல், மகாராஷ்ராவில் மது திருட்டு அதிகரித்துள்ளது.  இம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 4 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை  திருடி போலீசை திணறடித்துள்ளனர், மதுபான திருடர்கள். இது குறித்து மாநில கலால் துறை அதிகாரி ராவ்சாகேப் கூறுகையில், ``கடந்த 18ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், சதாரில் உள்ள பாரில் 1.5 லட்சம், காட்ஜே நகர் கடையில் 73,000, நாக்பூரில் உள்ள கடையில் 1 லட்சம், கோர் பகுதியில் உள்ள கடையில் ₹40,000 என கடந்த 2 நாட்களில் 4 லட்சம் மதிப்பிலான மதுவகைகள் மூடப்பட்ட கடைகளில் இருந்து திருடப்பட்டுள்ளன,’’ என தெரிவித்தார்.

Related Stories: