நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ மூலம் சிறிய செய்தியை பகிர இருக்கிறேன்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் நாட்டு ,மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 20ம் தேதி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து 25ம் தேதி நாடு முழுக்க முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று காலை மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரமதர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் நாட்டு ,மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சிறு செய்தி சொல்லவிருப்பதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அப்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை, அதனால் கொரோனா எந்த அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கொரோனா பாதிப்பு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். முதல் முறை உரையாற்றிய போது ஒரு நாள் மக்கள் ஊரடங்கிற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மக்கள் அனைவரும் சுயமாக ஊரடங்கை பிறப்பித்துக்கொண்டு வீட்டிற்குள்ளயே இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அந்த ஊரடங்கு பெரிய அளவில் வெற்றி பெற்ற போதிலும் சிலர் அதனை சரியாக பின்பற்றவில்லை என்று வருத்தமும் பட்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 3-வது முறையாக நாட்டு மக்களுக்கு  உரையாற்ற உள்ளார்.

Related Stories: