கொரோனா வைரஸால் புகை பிடிப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக மருத்துவத் துறை எச்சரிக்கை மணி!!

சென்னை : கொரோனா வைரஸால் புகை பிடிப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக மருத்துவத் துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிரை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ். முதலில் மனித உடலில் தாக்குதல் நடத்தும்  பகுதி நுரையீரல் தான். வாய், மூக்கு வழியாக உடலுக்குள் செல்லும் இந்த வைரஸ் நம் உடலில் உள்ள  செல்களுக்குள்  நுழைந்து சுவாச மண்டலம் முதலாக நுரையீரலின் பகுதிக்கு சென்று விடுகிறது.அங்கு இந்த தொற்று அடைகாத்து தன்னுடைய எண்ணிக்கை அதிகரித்து நுரையீரலில் பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தி நிமோனியாவால் மனித உயிர்களை விரைவில் கொன்று விடுகிறது.

புகை பிடிப்பதிலும், புகைப்பவர்கள் மற்றும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். என்ன ஒன்று கொரோனா உடனடியாக தீவிரத்தை காட்டுகிறது. புகை காலதாமதமாக தீவிரத்தை காட்டுகிறது.புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் அதிக ஆபத்தில் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாக அதிகமாகவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், விரல்களில் சிகரெட்டுகளை வைத்துக்கொண்டு வாய் பகுதிக்கு கொண்டு செல்வதால், வைரஸ் கையிலிருந்தால் வாய்க்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.மேலும் புகை பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் நோய் இருக்கலாம் அல்லது அதன் செயல்திறன் குறைந்து இருக்கலாம்.

இது நோய்க்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும்” எனக் கூறியுள்ளது.“புகை பிடிப்பவர்களின் சுவாச மண்டலத்தில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருக்கும்.எப்போதாவதுதான் புகைப்பேன் என்பவர்களும் இதில் தப்பிவிட முடியாது. ஏனென்றால், அவர்களுடைய சுவாச மண்டலும் பாதிப்பை சந்தித்திருக்கும். உங்கள் சுவாச மண்டலம் ஏற்கனவே சேதமாகியிருக்கும்போது கொரோனா வைரஸ் ஆபத்து என்பது தொடர்ச்சியாக அல்லது அவ்வப்போது புகைப்பவர்களுக்கு சமமாகவே உள்ளது. புகை பிடிப்பவர்கள் அதனை கைவிட இதுவே சிறந்த நேரமாகும். குறைந்தபட்சம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வரையிலாவது அப்பழக்கத்தை நிறுத்துங்கள்” என இந்திய சுவாசப்பிரிவு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Related Stories: