பயப்படாதீங்க... முட்டை, சிக்கன் வெட்டலாம்: கால்நடைத்துறை அறிவிப்பு

சென்னை: கோழி இறைச்சி மற்றும்  முட்டை  உண்பதற்கும், கொரோனா வைரஸ்  தொற்றுக்கும் தொடர்பு இல்லை என்று கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா தொற்று நோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி. இந்நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு சுவாச குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவைகள் படர்ந்துள்ள பொருட்களை தொடுவதாலும் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது. முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். இவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். எனவே தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.

Related Stories: