இலவச காஸ் யாருக்கு கிடைக்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் வெளியிட்ட அறிவிப்பு: பெட்ரோல் பங்கு முகவர்கள், ஊழியர்கள், எல்.பி.ஜி மெக்கானிக், டிரக் டிரைவர்ஸ் என மக்களிடம் எரிபொருள் மற்றும் எண்ணெய்யை கொண்டு செல்ல உழைப்பவர்கள் யாரேனும் கொரோனாவால் இறந்தால், அவர்களின் குடும்பத்தாருக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.மேலும், மக்கள் எங்கே சிலிண்டர்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற நோக்கத்தில் அவசர அசவரமாக சிலிண்டரை பதிவு செய்கின்றனர். காஸ் நிறுவனங்கள் முழு நேரமும் இயங்கி கொண்டு இருக்கிறது. எனவே யாரும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டாம். மாநிலம் முழுவதும் 1.3 கோடி பேர் இந்தியன் ஆயில் காஸ் பயண்படுத்துகின்றனர். அதில், ஒரு நாளைக்கு 2.2 லட்சம் பேர் உபயோகின்றனர்.

எனவே அனைவருக்கும் தடையின்றி வழங்கப்படுகிறது. எனவே ஒருவர் நிரப்பட்ட காஸ் வாங்கிவிட்டால், அவர்கள் 15 நாட்களுக்கு மேலும் ஒன்றை பதிவு செய்ய முடியாது. மேலும், மூன்று மாதம் இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அது, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கான தொகை அவர்களது பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Related Stories: