1,08,922 வழக்குகள்.. 1,25,793 பேர் கைது… ரூ.39,36,852 வசூல்….85,850 வாகனகள் பறிமுதல்.. 7 நாளில் செம மாஸ் காட்டிய தமிழக காவல்துறை

சென்னை: 144 தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793,பேர் கைதாகி ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 85,850 வாகனகள் பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வர கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.     

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,08,922 வழக்கு பதிவு செய்த போலீசார், 1,25,793 பேரை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில்  விடுவித்துள்ளனர். குறிப்பாக தடையை மீறி வாகனத்தை ஓட்டியதாக 85, 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.போக்குவரத்து போலீசாரும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இதுவரை 39,36,852 ரூபாய் அபராதமாக வசூல் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: