வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய தேவை செய்து தரப்படுகிறதா? கண்காணிக்க மின்வாரியம் உத்தரவு

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை ஒப்பந்ததாரர்கள் செய்து தருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் பல்வேறு பணிகளை ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்து வருகின்றனர். அவர்களின் கீழ் ஏரளமான வௌிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வீடு, முகாம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தங்க வைக்க வேண்டும். மேலும் உணவு, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

உரிய மருத்துவ சிகிச்சை, சமூக இடைவெளியே கடைபிடிக்கச்செய்ய வேண்டும். மேலும் அவர்களிடத்தில் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வது மற்றும் தேவையில்லாமல் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். முழு சம்பளத்தையும் தர வேண்டும். இதை தலைமை பொறியாளர்கள் குழு அமைத்து, ஒப்பந்ததாரர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை ஒப்பந்ததாரர்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தவறும் பட்சத்தில், மின்வாரியமே தயார் செய்து வழங்க வேண்டும். பிறகு அவர்களுக்கு வழங்கும் ஒப்பந்த தொகையில் இருந்து கழித்துக்கொள்ளலாம் என மின்வாரியம் கூறியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: