டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையிலும் திருவள்ளூரில் மது விற்பனை ஜோர்: எஸ்.பி. நடவடிக்கை எடுப்பாரா?

திருவள்ளூர்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் வரும் 14ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. பொதுவாக டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அதன்பின் டாஸ்மாக் கடைகள் அருகே மற்றும் பார்களில் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் பகல் 12 மணி வரை மதுப்பாட்டில்கள் தாராளமாக கிடைக்கும். தற்போது பார்களும் மூடப்பட்ட நிலையில், அதனருகே மறைவான இடத்தில் கோணிகளில் வைத்து, ஒரு குவார்ட்டர் ரூ.50 முதல் 80 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 மதுபாட்டில் பெட்டிகள் தனியாக ஒதுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மேல் விற்பனை தொடங்குகிறது. காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, திருவள்ளூர் எரிமேடை, பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி உட்பட மாவட்டம் முழுவதும் விடிய, விடிய விற்பனை ஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மீது எஸ்.பி., தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: