திட்டமிட்டபடி கடனை செலுத்தும்படி நிர்பந்தித்த வங்கிகளுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை என தமிழக அரசு செக்

சென்னை : அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான EMI கட்ட தேவையில்லை என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு அறிவிப்புகளும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அடுத்த 3 மாதங்களுக்கான EMI வசூலிக்கப்படாது என்ற முக்கியமான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திக்காந்த தாஸ் வெளியிட்டு இருந்தார்.

எனினும் ரிசர்வ் வங்கி தந்த 3 மாத கால அவகாசத்தை நிராகரித்த வங்கிகள், வீடு, வாகன கடன்களுக்கான மாத தவணையை செலுத்தும்படி வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி செலுத்தின. திட்டமிட்டபடி கடனை செலுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் இருந்து தொலைபேசி மூலம் கண்டிப்பு நேரிட்டது. ரிசர்வ் வங்கி உத்தரவாதத்தை நம்பி இருந்த வாடிக்கையாளர்கள் வங்கி நிர்பந்தத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் வங்கி நிகழ்ச்சி  நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,  அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டி, EMI வசூலிக்கப்டாது. ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம், எனத் தெரிவித்தார்.

Related Stories: