கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதில் 45 லட்சம் PMCaresFunds-க்கும், 25 லட்சம் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும், 5 லட்சம் Feeding India-க்கும், 5 லட்சம் Welfare Of Stray Dogs-க்கும் அளித்தார். மேலும் நம் நாட்டை நாம் அனைவரும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும், அதற்காக நான் என்னால் முடிந்தவரை நான் உதவி செய்கிறேன் என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மகாராஷ்டிராவில் மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்க்பபட்ட நிலையில் எண்ணிக்கை 230-ஆக உயர்ந்துள்ளது.

கொரரோனா தடுப்பு பணிக்காக ஜின்டல் ஸ்டீல் நிறுவனம் சார்ப்பில் ரூ.25 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கவுள்ளதாக ஜின்டல் ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நிதியாக நெய்வேலி என்எல்சி ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.5 கோடி மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் இருந்து ரூ.20 கோடி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Related Stories: