கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பும் மக்களை கும்பலாக அமரவைத்து கிருமி நாசினி தெளித்த அதிகாரிகள்

பரேலி; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, உத்தரபிரதேசத்துக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.   கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளதால் கால்நடையாகவே சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் சமூக தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு டெல்லியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பரேலி மாவட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் கும்பலாக உட்கார வைக்கப்பட்டு அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  குழந்தைகள், பெண்கள் என சாலையில் அமர்ந்திருக்கும் புலம்பெயர்ந்தோர் குழு மீது போலீசார் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அப்போது அதில் `குழந்தையின் கண்களை மூடு, உனது கண்ணையும் மூடிக்கொள்’ என குடும்பத்தலைவர் சொல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால், பிளிச்சின்  கலந்த தண்ணீர் மட்டுமே அவர்கள் மீது தெளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories: