சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடிகை ஷிகா மல்ஹோத்ரா நர்ஸாக பணியாற்றி வருகிறார். இந்தியில் ஷாருக்கான் நடித்த ஃபேன் மற்றும் ரன்னிங் ஷாதி டாட் காம், லக்கி கபுதர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷிகா மல்ஹோத்ரா. இவர் டெல்லியிலுள்ள வர்தமான் மகாவீர் மருத்துவ கல்லூரியில் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். சில காலம் நர்ஸாக பணியாற்றி வந்தவர், திடீரென மாடலிங் துறைக்கு சென்றார். அதன் மூலம் நடிகையாக மாறினார். இப்போது சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கொரோனாவால் மும்பையில் பலர் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து ஷிகா மனம் வருந்தினார். இதையடுத்து தனது நர்ஸ் பணிக்கு அவர் திரும்பியிருக்கிறார்.