×

இறங்கி வந்த மஞ்சள் உலோகம் : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 64 ரூபாய் குறைந்து ரூ.33,544 விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ளன. இருந்தாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (மார்ச் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,193 ஆக உள்ளது. நேற்று 4,201 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.அதேபோல, நேற்று 33,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 64 ரூபாய் குறைந்து 33,544 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆறாவது நாளாகத் தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.70 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 41,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : jewelery , Descending yellow metal: The gold price of jewelery fell by 64 rupees to Rs 33,544
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!