கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் டிஜிபி, தலைமைச் செயலர், ஊரடங்கை கண்காணிக்க, அத்தியாவசிய பொருள் கிடைக்க அமைக்கப்பட்ட 9 குழுக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள், அதிகாரிகள், கலந்து கொண்டனர். சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது என கூறினார். மக்களின் நடமாட்டத்தை குறைத்து, நோய் தொற்று பரவுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். மேலும் சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளர், காவல்துறை அனைவரும் தொடர்ந்து பணியில் ஈடுப்பட்டு வருகினறனர் எனவும் தெரிவித்தார். 

Related Stories: