கல்விக் கட்டணம் கேட்டு தனியார் பள்ளிகள் நெருக்கடி: பெற்றோர் தவிப்பு

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனா–்ல் பொதுமக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று அரசு வலியுறுத்தி வருகிறது, அதன் பேரில் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் வீடுகளிலேயே உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்்ச்சி அடைந்ததாகவும் அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில், பணியில் இருப்போர் வாங்கியுள்ள வங்கிக் கடன்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளையும் 3 மாதத்துக்கு ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த வருடத்துக்கான கல்விக் கட்டணங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளன. மேலும் வரும் கல்வியாண்டில் சேர்க்கை பெற்றுள்ள புதிய மாணவர்களும் விரைவில்தங்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு புதிய சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பெற்றோருக்கும் தனியார் பள்ளிகளில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வீட்டுக்குள் முடங்–்கியுள்ள பெற்றோர் எப்படி கல்விக் கட்டணத்தை செலுத்த முடியும். மேலும் பணியில் உள்ளவர்கள் மாத ஊதியம் பெற்ற பிறகே கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலை இருப்பதால் 1ம் தேதிக்கு பிறகுதான் பணம் செலுத்த முடியும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியில் வர முடியாது. அப்படி இருக்கும் எப்படி பணம் செலுத்த முடியும் என்றுபெற்றோர் தெரிவிக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: