அடித்தட்டு மக்கள் படும்பாடு அதிகம்: ஆனந்த் சீனிவாசன், பொருளாதார நிபுணர்

* விவசாயிளுக்கு 2 ஆயிரம் போடுவதாக கூறுகின்றனர். தமிழகத்தில் பாதிபேர் குத்தகை நிலத்தில் தான் விவசாயம் செய்கின்றனர். அவர்களுக்கு எப்படிவரும், ரேசன்கார்டு இல்லாதவர்களுக்கு எப்படி பணம் போடுவார்கள்.

Advertising
Advertising

இந்தியாவில் மூன்று விதமான ஆட்கள் இருக்கின்றனர். டாப் ஒரு சதவீதம்தான்;  மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறவர்கள். அவர்களுக்கு இதனால் பாதிப்பில்லை அவர்ளுக்கு ஏற்கனவே கார், இஎம்ஐ போன்றவற்றை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்து சரி செய்து விட்டனர்.  10 முதல் 15 சதவீதம் பேர்  மாதம் ரூ.30 ஆயிரம் சாம்பாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள்;  அவர்களுக்கும் கடன் தவணை தள்ளி வைத்து விட்டனர். ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கிறவர்களுக்கும் சில பேருக்கு சம்பளம் வராது. 2,3 மாதங்கள் வெளியில் கடன் தான் வாங்க வேண்டியிருக்கும். என்ஜினியரிங் கல்லூரி, பள்ளிகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வராது. அவர்கள் வெளியில்தான் கடனை வாங்கி குடும்ப நடத்த வேண்டும்.

 ஸ்திரி செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், மேஸ்திரி வேலை செய்பவர்கள், ஆக்டிங் டிரைவர், கார்பெண்டர், சுகி டெலிவரி செய்பவர்கள், ஏசி மெக்கானிக் -  இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 வரை சம்பளம் இருக்கும். இவர்களில் பலருக்கு தினக்கூலி 500  முதல் 800 ரூபாய் வரை; இவர்கள் தான் பாதிக்கப்படக் கூடியவர்கள்;இவர்கள் தான் தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கொஞ்சம் மேல் இருக்கிறவர்கள்.  இவர்கள் தான், மீதமுள்ள 30-35 சதவீதம் பேர் கிராமத்தில் இருப்பவர்கள் நிரந்தரமாக வருமானம் இருக்காது. மீதம் உள்ளவர்களுக்கு, மிகவும் ஏழைகளுக்கு 5 நாட்கள் கூட வேலை கிடைக்கப்போவதில்லை.

இதைப்போன்று வெளியூரில் இருந்து தமிழகம், சென்னைக்கு வந்துவேலைக்கு செல்பவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு ரேசன் கார்டு எதுவும் கிடையாது. அவர்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் போன்றவை எப்படி கொடுக்கப்போகிறார்கள் என்று ஒரு ஆலோசனையும் இல்லை.  தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கி ரூ.1000 தருவதாக கூறுகின்றனர். இந்த ரூ.1000 வைத்து ஒண்ணும் பண்ண முடியாது. 90 நாட்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால் ரூ. 15,000 வரை நஷ்டம் வரும் அவர்களுக்கு ரூ.1000 கொடுப்பது அவர்களை அவமானப்படுத்துவது மாதிரி மூன்று மாதத்திற்கு ரூ.45 ஆயிரம் நஷ்டம் வருகிறவர்களுக்கு ஒருதடவை ரூ.1000 கொடுத்து சரி செய்வது என்றால் என்ன நியாயம்? இந்த மாதிரி பைனான்சில் இரண்டு விதமாக உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1.70 லட்சம் கோடி பேக்கேஜ் என்பதே கிடையாது. அது ரூ.30 ஆயிரம் முதல் ரூ, 40 ஆயிரம் கோடி தான் பேக்கேஜ் அதை பேக்கேஜ் என்று சொல்லுவது நம்மை நாமே  ஏமாற்றிக்கொள்வது.  அந்த பேக்கேஜ் ஒரு மாதத்திற்கு ரூ.500 வீதம் மூன்று மாதத்திற்கு ரூ.1500 போடுவதாக கூறுகின்றனர். மாநில அரசு ரூ.1000 கொடுக்கும் போது மத்திய அரசு ரூ.500 தருவதாக அறிவித்திருக்கின்றனர். அதுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவு பண்ணியிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் போடுவதாக கூறுகின்றனர். தமிழகத்தில் பாதிபேர் குத்தகை நிலத்தில் தான் விவசாயம் செய்கின்றனர். அவர்களுக்கு எப்படிவரும், ரேசன்கார்டுஇல்லாதவர்களுக்கு எப்படி பணத்தை போடப்போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

மேலும் திமுக ஆட்சியில் கலைஞர் காஸ் சிலிண்டர், அடுப்பு இலவசமாக தருவதாக கூறினர். அது தான் இப்போது உஜ்வலா திட்டம் என்கிறார். அதில் மூன்று காஸ் சிலிண்டர் இலவசமாக தருகிறேன். ரூ.14 ஆயிரம் கோடி செலவு பண்ணுகிறேன். காஸ்சிலிண்டர் ரூ.600க்கு தருவதாக கூறுகின்றனர். சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள் மூன்று காஸ்சிலிண்டரை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்.

 மேலும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.150ல் இருந்து ரூ.202 ஆக்குவதாக கூறுகின்றனர். நாடு முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளதால் எப்படி வேலைக்கு போக முடியும்.  வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம் குறைக்க வேண்டும். கேஸ்பலூனை பெரிதாக ஊதி கொரோனா என்பது கடைசியான ஊசியை அதை வைத்து பலூனை குத்திவிட்டார்களா என்று தான் பார்க்க வேண்டும்.

Related Stories: