தமிழகத்தில் புதிதாக 10 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா; ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். தாய்லாந்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதில் 4 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று  தெரிவித்தார். சேலத்தில் 80 ஆயிரம் பேருக்கும், சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 27,725 பேருக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோட்டில் 50 பேருக்கு காய்ச்சல் இருமல் இருந்தது கண்டுபிடித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 13,323 படுக்கைகள் உள்ளன. 3018 வென்டிலேட்டர்கள் உள்ளன. தற்போது 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1763 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1632 பேருக்கு உறுதி செய்யப்படவில்லை.

10 வயது குழந்தைக்கு கொரோனா

இன்று ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 வயது குழந்தையும் அடங்கும். ஈரோடு மாவட்டத்தில் 27,725 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் 8 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் உள்ள 10 மாத ஆண் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>