மக்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம்; சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உருக்கம்

டெல்லி: உலக மக்களை கொரோனா வைரஸ் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 979  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை பொதுமக்களுடன் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை. வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது; மக்கள் தன்மீது கோவம் கொண்டிருக்கலாம். இந்த சூழலில் வேறு வழியில்லை என்றார். மக்கள் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற கட்டுப்பாடுகள் அவசியம் என்றும் கூறினார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர் மிகவும் கடினமானது; அதனால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்திய மக்களை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது என்றும் உரையில் தெரிவித்தார். வேண்டுமென்றே கட்டுப்பாடுகளை யாரும் மீற மாட்டார்கள் என்பது தனக்குத் தெரியும். கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனாவிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வது கடினமாகிவிடும். கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம்.

கொரோனாவுக்கு எதிரான போர் வீரர்களாக களத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகள், நீங்களும் கவனமாக இருங்கள். 2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, உங்களுடைய சேவைக்கு ஈடு இணையே இல்லை. கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் பிரதமர் உரையாடலில் தெரிவித்தார்.

Related Stories: