ஊரடங்கை அமல்படுத்த மாநிலம் முழுவதும் 557 செக்போஸ்ட் அமைப்பு

சென்னை: ஊரடங்கை அமல்படுத்த மாநிலம் முழுவதும் 557 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  வெளிநாடுகளில் இருந்து பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து மார்ச் 21ம் தேதி வரை வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மார்ச் 1ம் தேதியில் இருந்து கணக்கெடுத்து இதுவரை 88695 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  ஊரடங்கை அமல்படுத்த மாநில அளவில் 557 செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்னும் ரயில் பாதை வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதியவர்கள் வெளியில் செல்வதை கூடுமான அளவுக்கு தவிர்க்க வேண்டும். ஊரடங்கை முழுமையாக பின்பற்றும் போது  நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: