மருந்துகள், உபகரணங்கள் கொண்டுசெல்ல சிறப்பு பார்சல் வேகன்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், முகமூடிகள் போன்றவற்றை கொண்டு செல்வோரின் வசதிக்காக சிறப்பு பார்சல் வேகன்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த பார்சல் வேன் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. கோவிட்-19யை அடுத்து தெற்கு ரயில்வே உணவுப்பொருட்கள், பவர் ஹவுஸ்களுக்கு தேவையான நிலக்கரி ேபான்ற அத்தியாவசிய பொருட்களை நாடுமுழுவதும் கொண்டுசெல்ல தடையற்ற சேவைகளை வழங்கி வருகிறது.  இப்போது மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், முகமூடிகள் ேபான்றவற்றை சிறப்பு குறிப்புடன், மாநில அரசுகள் உட்பட தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் விரைவாக கொண்டுசெல்ல ரயில்வே பார்சல் வேகன்கள் கிடைக்கும்.

தற்போது இந்த வேகன்கள் இயங்க தயாராக உள்ளன. அதன்படி இந்த ரயில்கள் கோவை-படேல் நகர் (டெல்லி பிராந்தியம்) - கோவை, கோவை-ராஜ்கோட்-கோவை, கோவை-ஜெய்பூர்-கோவை, சேலம்-பட்டிண்டா  ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.  ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்ய ரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம். தற்போதுள்ள விதிகளின்படி பார்சல் மற்றும் சரக்கு கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Related Stories: