கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணிக்காக 18,000 தன்னார்வலர் பதிவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், பிளாட்பாரங்களில் வசிப்பவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.  இவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்ய அரசு முயற்சி எடுத்து வந்தாலும் அதை அமல்படுத்துவதில் பல பிரச்னைகள் உள்ளன. இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய போதிய ஊழியர்கள் இல்லை.  அதனால், சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள தயாராக இருக்கும் தன்னார்வலர்கள், ‘’ஸ்டாப் கொரோனா’’ என்ற இணையதளத்தில் பதிவிடலாம் என்று அரசு அறிவித்தது.

அதனடிப்படையில் சென்னை டாக்டர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்கள், பல்வேறு அத்தியாவசிய துறையை சேர்ந்தவர்கள் என நேற்று வரை 18 ஆயிரம் பேர், தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.  இவர்களில் 500 டாக்டர்கள், 1000 மருத்துவம் சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் அடங்குவர். இந்த பட்டியலை ஆய்வு செய்து தகுதிக்கேற்ப பணிகளை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: