வேலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில் வருண் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

வேலூர்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேபோல், தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் தலைமையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வருண் வாகனம் மூலம் நேற்று கிருமிநாசினி ெதளிக்கும் பணி நடந்தது. கிரீன்சர்க்கிள், சர்வீஸ் ரோடு மற்றும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை, கலெக்டர் அலுவலக வளாகம், எஸ்பி அலுவலக வளாகம், புதிய பஸ் நிலையன், வேலூர்-காட்பாடி சாலை, காட்பாடி ரயில் நிலையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தனர்.

இதுகுறித்து டிஎஸ்பி விநாயகம் கூறுகையில், ‘வேலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில் வருண் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 12 ஆயிரம் கொள்ளளவு கொண்ட டேங்கில் 150 கிலோ பிலிச்சிங் பவுடர், 30 லிட்டர் கிரிமிநாசினி ஆகியவை கலந்து தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Stories: