மக்களே உஷார்!!.. இந்தியா ஸ்டேஜ் மூன்றிற்கு நுழைந்துவிட்டது…! அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து! : கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு

டெல்லி :இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.உலகமெங்கும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டு நாட்களில் வேகமெடுத்துள்ளது. இதுவரை 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபது பேர் உயிரிழந்துள்ளனர், வெறும் 83 பேர் குணமடைந்துள்ளனர். அதிகமாக கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் கொரோனா தடுப்பு சிறப்புக்குழு ஒன்று தற்போது தீவிரமாக செயல்பட்டு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.அந்த குழுவின் தலைவரான கிரிதர் ஞானி “கடந்த 24ம் தேதியன்று பிரதமர் மோடியுடன் எங்களது அணி கலந்துரையாடியது. அதில் அரசு இன்னும் பழைய மருத்துவ முறையையே கையாண்டுக்கொண்டு வருகிறது என்பதை அறிந்துக்கொண்டோம். மேலும் இந்தியாவில் கொரோனாவின் எண்ணிக்கை அதிவேகத்துடன் அதிகரித்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இன்னும் அதிகப்பேருக்கு வரக்கூடும்.

இந்தியா ஏற்கனவே ஸ்டேஜ் மூன்றிற்கு சென்றுவிட்டது. இப்போது அறிகுறி இல்லாத நபர்களுக்கு வரும் நாட்களில் அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இதை மாற்ற வேண்டும்.இந்தியாவில் போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தது 300 பெட்கள் இருக்கவேண்டும். டெல்லி போன்ற பெரிய நகரங்களில் குறைந்தது 3000 பெட்களாவது இருக்கவேண்டும். அப்போது தான் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

கொரோனா பரவல் மொத்தம் 4 வகைப்படும்..

ஸ்டேஜ் 1 : வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.

ஸ்டேஜ் 2 : கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது லோக்கல் டிரான்ஸ்மிஷன்.

ஸ்டேஜ் 3 :அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். இதை கட்டுப்படுத்த முடியாது.

ஸ்டேஜ் 4 : இந்த கம்யுனிட்டி டிரான்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன்.

Related Stories: