பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்: கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் மளிகை கடைகள், மருந்து கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. தற்போது இந்த அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை,

* காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்

* மருந்தகங்கள், உணவகங்கள்( பார்சல் மட்டும்) நாள் முழுவதும் இயங்கலாம்.

* ஸ்விக்கி, சொமோட்டோ, உபெர் போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு.

* மளிகை கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.

* மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை.

* பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே  செயல்படும்.

* காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்பட வேண்டும்.

* விரைவில் அழுகக் கூடிய பொருட்களை குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கலாம்.

* விளைபொருட்களை 180 நாட்கள் அரசு சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம். சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை.

* 108 ஆம்புலன்ஸ், அரசு வாகனங்களுக்கான பெட்ரோல் பங்குகள் மட்டும் தொடர்ந்து செயல்படும்.

* கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

* உணவு விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் போலீசாரிடம் அடையாள அட்டை பெற்று கொள்ள வேண்டும்.

* உரங்கள், பூச்சி மருந்து, விதை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படவும் தடையில்லை.

* வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும்.

Related Stories: