நாட்டு தலைவருக்கே கொரோனா: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பாதிப்பு இருப்பது உறுதி....உலக அளவில் முதல் முதலில் பாதிக்கப்பட்ட பிரதமர்

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார். வீட்டிலேயே இருந்து கொண்டு பிரதமருக்கான பணிகளை செய்ய இருப்பதாக போரிஸ் ஜான்சன் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால்    பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது வரை இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியதாவது; கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், சோதனை செய்ததில் கொரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை போல பிரிட்டனின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: