எரிவாயு சிலிண்டர்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படும்: அச்சத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம்

சென்னை: எரிவாயு சிலிண்டர்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படும், எனவே மக்கள் அச்சத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம் என பெட்ரோலியத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் பொது மேலாளர் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை. கட்டுபடுத்தப்பட்ட இந்த நாட்களில் தேவையற்ற அவசர எல்.பி.ஜி முன்பதிவுகள், உண்மையிலேயே சிலிண்டர் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் சப்ளை செய்ய முடியாத நிலையை உருவாக்கக்கூடும்.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய முன்பதிவு தேவைக்கு ஏற்றாற்போல் இயல்பான முறையில் பதிவு செய்து கொள்ளவும். வாடிக்கையாளார்களின் நலன் கருதி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>