பெட்ரோல் பங்குகள் இயங்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: இந்தியன் ஆயில் தென்மண்டல பொதுமேலாளர் சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் இயக்கப்படும் பெட்ரோல் பம்புகள் வரும் நாட்களில் வழக்கம் போல் செயல்படும் என்று பெட்ரோலியத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் உறுதியளித்துள்ளார்.

Advertising
Advertising

குறைந்த அளவு பணியாளர்களால் இயக்கப்படும் பெட்ரோல் பம்புகள், தற்போதுள்ள கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் குறைந்துள்ள வாகன போக்குவரத்துக்கும் மற்றும் அவசர/ அத்தியாவசிய போக்குவரத்துக்கும் தேவையான எரிபொருட்களை வழங்கும். வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கான எரிபொருட்கள் அனைத்து பொதுத்துறை பெட்ரோல் பம்புகளிலும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: