ஸ்டான்லி மருத்துவர் சந்திரசேகர் திடீர் இடமாற்றம்; தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி உத்தரவு: முகக்கவசம் கேட்டதால் இடமாற்றம் என்று சர்ச்சை

சென்னை: நாடே கொரோனா யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னையில் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறையில் மூத்த உள்ளுறை மருத்துவராக பணிபுரிந்த சந்திரசேகர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சந்திரசேகரின் பணியிட உத்தரவு உடனே அமலுக்கு வருவதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவுக்கான தனி சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என்று அரசுக்கு மருத்துவர்கள் குழு கடந்த பிப். மாதம் கடிதம் எழுதியதே சந்திரசேகர் இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனா நோயாளிகளை காப்பாற்ற முழு மூச்சாக போராடிக்கொண்டிருக்கும் போது அரசின் இது போன்ற நடவடிக்கைகள் மருத்துவர்களின் மன உறுதியை குலைப்பதாக அமைந்துவிடும் என்று கருதப்படுகிறது.

ஆகவே கொரோனவை வெற்றி கொள்வதில் முக்கிய பங்காற்றும் மருத்துவர்களுக்கு போதிய உயிர்காக்கும் கருவிகளை அளிப்பதுடன் நெருக்கடியான காலக்கட்டத்தில் இது போன்ற நடவடிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சங்கம் கூறியுள்ளது.

Related Stories: