கொரோனா முன்னெச்சரிக்கை: பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக முடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இன்று இரவில் இருந்து 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி தனது பேச்சில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதோடு இதுவும் சுய ஊரடங்கு போலத்தான், ஆனால் அதை விட தீவிரமாக இப்போது கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இந்தியாவில் அடுத்த 21 நாட்களுக்கு எதெல்லாம் செயல்படும், எதெல்லாம் செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது;

* பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயல்பட தடையில்லை.

* ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், நெடுஞ்சாலையோர கடைகள் செயல்படும்.

* உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்தகங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம்.

* ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.

* தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்.

* அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்.

* அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

* அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி.

* இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.

* உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்தகங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம்.

* ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.

* வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

* பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி.

* விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

* இந்தியாவில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயங்காது.

* ஏற்கனவே அறிவித்த தடைகளின் படி பள்ளிகள், கல்லூரிகள், தனியார், அரசு நிறுவனங்கள், மதுபானகடைகள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள், சந்தைகள் மொத்தமாக செயல்படாது.

Related Stories: