உலகம் முழுவதும் கொரோனாவால் 17,138 பேர் உயிரிழப்பு: குஜராத்தில் 10, 12-ஆம் வகுப்புகளை தவிர 1 முதல் 9 வரை மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 'ஆல் பாஸ்'என அறிவிப்பு

குஜராத்: கொரோனா முன்னெச்சரிக்கையாக குஜராத்தில் 10, 12-ஆம் வகுப்புகளை தவிர 1 முதல் 9-ஆம் வகுப்புகள் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என குஜராத் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 என தற்போது இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,026843 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டது. இந்நிலையில் குஜராத் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகள் ஏற்கனவே குஜராத் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியத்தால் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு தேர்வுகள் நடத்த முடியாததால், அனைத்து பள்ளிகளையும் மூடி, மாநில வாரியத்தின் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி செய்ய  குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. முன்பாக உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: