இந்தியாவில் கொரோனா பாதிப்பு 492 ஆக உயர்வு; 30 மாநிலங்களில் ஊரடங்கு: இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி   16,510 பேர் உயிரிழந்துளளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று   வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 19-ம் தேதி நாட்டு மக்களின் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வேகமாக பரவுவதை தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும், மக்கள் ஒருநாள் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல்  இரவு 9 மணி வரை வீடுகளுக்குள் இருக்க ஊரடங்கு கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று  மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டது. நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து  நாட்டின் தலைநகர் டெல்லி முடங்கியது. மும்பை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திர, கர்நாடகா என இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் மக்கள் ஊரடங்கால் வெறிச்சோடியது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில்  அமைதியாக நடைபெற்று வந்த சுய ஊரடங்கு 5 மணியை எட்டிய நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் உள்ள மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அப்போது, கொரோனா தொற்று குறித்து அனைவரும் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றி பேசுவார் என கூறப்படுகிறது.  மேலும், கொரோனா நிவாரண குறித்த அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரேனா வைரஸ் பரவுவதை தடுக்க யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட நாட்டின் 30 மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: