நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் விவரம் தராவிட்டால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா? என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை மூலம் தொற்று நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

மேலும், திருவள்ளுர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 20.02.2020 அன்றைய தேதிக்கு பிறகு இன்றைய தினம் வரை எவரேனும் வெளிநாட்டில் இருந்து  பணி நிமித்தமாகவோ, விடுமுறைக்காகவோ வருகை புரிந்திருந்து தற்போது தங்கி இருப்பின்  அவரது விவரத்தினை திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக  தொலைபேசி எண்: 044-27661200 செல்போன்: 9444317862 ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: