இந்தியாவில் மகாராஷ்டிராவை அதிகம் தாக்கும் கொரோனா: இன்று மட்டும் 15 பேருக்கு தாக்கம் உறுதி...பாதிப்பு 89 ஆக உயர்வு

மும்பை: சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 192க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு  பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 3,36,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் 391க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்தனர். இதன்  மூலம் இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தாக்குதல் அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 74 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும், 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்,இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Related Stories: