சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேச்சு கட்சி பதவியை இழந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்து இருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கியமானவர் அவர் எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அவரை அழைத்து கண்டித்தார். இந்த நிலையில் சமீபத்தில் ராஜேந்திர பாலாஜி திருச்சிபாஜ பிரமுகர் விஜய ரகு கொலை வழக்கு குறித்து பேசும் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே கட்சியில் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் ஒருவரை அமைச்சரின் ஆதரவாளர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட செயலாளர் பதவியை பறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர். இது குறித்து இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் , விருதுநகர் மாவட் செயலாளர் பொறுப்பில்  இருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் விரைவில் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Related Stories: