தமிழகத்தில் போக்குவரத்து முடங்கியது: லாரி, கார், வேனில் பணிபுரியும் 11 லட்சம் பேர் வேலை இழப்பு

சென்னை: தமிழகத்தில் சாலைபோக்குவரத்து முடங்கியுள்ளது. லாரி, பஸ், கார், வேன் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார்  11 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழகத்தில்  வாகனப்போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது.

சென்னையில் தினந்தோறும் 1 லட்சம் ஆட்டோ உள்ளது. தற்போது பொதுமக்கள் பயணிக்காத காரணத்தால் வெறும் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மட்டுமே இயங்குகிறது.

இதேபோல் சென்னையில் தினந்தோறும் 15 ஆயிரம் தனியார் கால்டாக்சிகள் இயங்கி வந்தது. அதுவும் பாதியாக குறைந்தது. இதனால் கால்டாக்சி சேவை  முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் வேன், லாரி, தனியார் பஸ் நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 லட்சம்  போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: